ஓர் நொடியின் உயிர் ஒலி - தேன்மொழியன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓர் நொடியின் உயிர் ஒலி
~~~~~~~~~~~~~~~~~~~~
முறைத்து நின்று
முறத்தில் அள்ள
நெஞ்சத்தின் சிதறல்
நெல்மணி அல்ல ...
அள்ளி முடிந்த
கூந்தல் நடுவில்
கிள்ளி எறிந்த
அல்லி இதழா நான் ..?
உழவும் நிலத்தில்
அகவும் மயிலென
நழுவும் தாவணி தான்
உன் உளவியல் உச்சமோ ..?
உண்ணலை உதறிய
என்னுடம்பின் எலும்பிலும்
உன்னலின் உளறலாய்
உறக்கத்தில் ஓர் தழும்பு ..
ஆழத்தில் அழுகிய
ஆல மர வேர்நுனியாய்
தாகத்தில் கதறுதடி
ஆழ்மன உயிர் ஒலி ..
- தேன்மொழியன்
உன்னல் - ஆழ்ந்த சிந்தனை ..