வேதியியல் காதல்
வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !
நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !
நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !
உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !
காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !
துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !
துத்த நாக உப்போடு
சேர்ந்த குளோரின் போலே
பொங்குகிறேன் வெடித்து !
ஒளிச் சேர்க்கை படித்து
இருப்பாய்!
பார்த்த துண்டோ ? என்னவளே
என் கண்களை பார் !
உன் புன்சிரிப்பில்
எத்தனை புன்சன்
சுடரை பற்ற வைத்து இருப்பாய் ?
ஆண்கள் மனதில் !
உன் குழைந்த பேச்சில்
எத்தனை இதயங்களை
கரைத்து இருப்பாய் ?
கந்தக அமிலம் போல !
மின்னார் பகுப்பது
வேதியியல் என்றால்
கண்ணார் பகுப்பது
காதல் அன்றோ !
அளவு குடுவையிலே
அளவு எடுக்கையிலே
அங்கே தெரிவது
உன் முகம் !
வேதியல் படித்தவனுக்கு
தெரியும் !
இயற்பியலில் இவ்வளவு
காதல் இருக்காது !
அங்கே நிகழ்வது
ஒளிவிலகல் !
ஈர்ப்பு விசை என்று
விளக்கம் சொல்லுவர் !
நம்பாதே எல்லாம்
எலெக்ட்ரான் புரோட்டானின்
நகர்வப்பா!
கடைசி வரை
விளங்காத என்னவள்
மனம் ! ஒரு
கரிம வேதியியல் !
பெண்ணும் பென்சீனும்
ஒன்று !
கோணல் கொஞ்சம்
அதிகம் தான்!
குழம்பும் கார்பன்
போலே புலம்பும்
ஆண்களின் இதயம்
தான் !
-செந்தூர் பாண்டியன்