காதல் கவிதைகள் சில
என் நெஞ்சை கீறும் நகங்கள்
அவள் விரல்களில்!
என்னை கோபமாக பார்க்கும் பார்வைகள்
அவள் விழிகளில்!
என் கைகள் தாங்கும் பாதங்கள்
அவள் கால்களில்!
என் சொற்களை ரசிக்கும் செவிகள்
அவள் முகத்தில்!
எனக்கு சொந்தமான அனைத்தும்
உன்னிடத்தில்!
உன்னை கொடுப்பாயா முழுதாய்
என்னிடத்தில்....?
போராட்டம்
அன்பே !ஏன் ! இந்த பாராமுகம் !
நீ நடந்த பாதையின் கால்
சுவடுகளைத் தேடித் திரிகிறேன் !
நீ விழியால் பேசிய வார்த்தைகளின்
ஒலியை என் கண் முன் ஓட
அதன் பின்னே நான் இளங்கன்றாய்
துள்ளி துள்ளி ஓடுகின்றேன் !
பகல் சூரியனுக்காக காத்திருக்கிறது ;
இரவு நிலவுக்காக காத்திருக்கிறது ;
பூக்கள் மலர்வதற்காக காத்திருக்கிறது ;
மரங்கள் பூப்பதற்க்காக காத்திருக்கிறது ;
நானும் காலமெல்லாம் காத்துக்
கிடக்கிறேன் உன் பூமுகம் மலர்ந்து
புன்னகையோடு நீ வருவதற்காக !
காதல்
மனசெங்கும் நீ நிறைந்தாய்-என்
மௌனத்திலும் தேன் சுரந்தாய்
மலர்களெல்லாம் நீயே ஆனாய்-அதன்
மணங்களிலும் நீ நிறைந்தாய்!
என் வைகறைச் சலனங்களில்
பனித் துளியாய் எனில் விழுந்தாய்.
உன் மைவிழிப் பார்வைகளால்-என்
மனசுக்குள் நீ பதிந்தாய்!
இதழ்களிலே மதுவேந்தி
என்னை நீ அழைக்கின்றாய்...
இனிப்பெடுத்து நான் பருக
என்று நீ இசைந்திடுவாய்?
சாயங்காலப் பறவைகளின்
சப்தங்களில் உன் மொழிகள்!
என் சப்தத்திலும் மௌனத்திலும்
சுற்றிடும் உன் நினைவலைகள்!
உடலெங்கும் அழகேந்தி
என்னருகில் வருகின்றாய்-
உனில் முழுதும் நான் நிறைய
எப்போது வரம் தருவாய்?
நான் தீட்டும் ஓவியத்தில்,
நான் மீட்டும் காவியத்தில்
நாயகியாய் நீ ஆனாய்...
என் நிழல்களுக்கு நிறந்தீட்டி,
நினைவுகளை நிஜமாக்க
எப்போது நீ வருவாய்?
இதயத்தை
எப்போது நீ தருவாய்?
என்னை ஏதோ செய்துவிட்டாள்
அடி பெண்ணே !
என்னை ஏதோ
செய்துவிட்டாய் !
என்னை எதையோ
செய்துவிட்டாய் !
புதுமையாய் உணர்கிறேன்
புதுசாய் சிரிக்கின்றேன்.
பற்பசையை முகத்தில்பூசி
பற்களை தேய்க்கிறேன்.
பிறபாஷைகளில் எழுதி
தமிழ்கவிதை என்கிறேன்.
உயிரெழுத்து எதுவென்றால்
உன் பெயரை சொல்கிறேன்.
மெய்யெழுத்தை கேட்டால்
உன் தேகத்தில் தேடுகிறேன்.
அறியவில்லையடி யாப்பு
நீயேயென் சிந்தனை தோப்பு
கவிதையென்று எழுதுகிறேனடி.
உன் உறவுக்காகவே
விதியை மீறுகிறேனடி.
காதலுக்கு எதற்கு
மொழி இலக்கணம்? - உன்
விழி இலக்கணம்
கற்கவேண்டும் எனக்கு.
அடியே..!
அடி அடியாய்
உன்னை எழுதுகிறேன்
என்னை ரசிக்கிறேன்.
நீ கவிதையடி
நான் ரசிகனடி.