வார்ப்புகள்

மானும் மயிலுமாய் மாறும்- இந்த
வேலிச்செடிகளைப் போல்
நானும் எனதும் மாறும் - எனை
கத்தரிக்கும் வேதனைகள்

வெட்டுவதற்கல்ல
வடிக்கத்தான் கத்திரிகள்
சிதைப்பதற்கல்ல
செதுக்கத்தான் உளிகள்
முழங்கிட அல்ல
மழையத்தான் இடிகள்
இயற்கையின் விதிகள்
இறைவனின் வரங்கள்

இந்த
வேதனைகள்…….

நிறம்பூசி மணம் வீசி
நிச்சயமாய் சிலிர்த்துவரும்
வசந்தகாலப் பூக்களின்
செடிகளுக்கு உரங்கள்….!

புண்பட்டு பண்பட்டு
புதிதாய் உருவாகும்
வாழ்க்கைச் சித்திரம்
தொட்டெடுக்கும் நிறங்கள்

விலகிட தூரமில்லை
பழகினால் பாரமில்லை
பயணத்தின் வழிநெடுக
பூத்துவரும் நிஐங்கள்…!(2013)


(கடவுளின் நிழல்கள் நூலிலிருந்து..எழுத்தில் மறுபதுவு ..என் வெளிச்செடிகள் அன்னும் தலைப்பில் வெளியானது)

எழுதியவர் : கவித்தசபாபதி (9-Jun-15, 1:45 pm)
பார்வை : 108

மேலே