தொடரும் என் வலிகள் - சகி

வாழ்க்கை

என் வாழ்க்கைப்பற்றிய
அனைத்துக்கனவுகளும்
கனவாகவே போனது ....

என் வாழ்க்கையென்னும்
கல்லறைத்தோட்டத்தில்
மலர்ந்து மடிந்த மலர்களாகவே...

கல்லறையில் மலரும்
மலர்கள் இறுதிவரை
கல்லறைக்கே சொந்தம் .....

அதுபோலவே .................................

என் வாழ்க்கையும்
என் கனவுகளும்
என் வலிகளும்

என் வாழ்வின் இறுதிவரை
என்றுமே எனக்கு
மட்டுமே சொந்தம் ....

உரிமைக்கொண்ட உறவுகள்
எதுவுமே நிரந்திரமில்லை
என்றுணர்ந்தேன் ....

தொடரட்டும் வலிகள்
என் மூச்சின் இறுதிநொடிவரை ......................

எழுதியவர் : சகி (9-Jun-15, 1:43 pm)
பார்வை : 724

மேலே