வலை விரிக்கும் வஞ்சிகள்

..."" வலை விரிக்கும் வஞ்சிகள் ""...
தரையில் நிற்காமலே
தண்ணீரில் தள்ளாடுகிற
ஆண்களுக்கு மத்தியிலே
அன்றாட நிலைபாட்டை
நிலை நிறுத்திக்கொள்ள !!!
வண்ணத்து பூச்சிகளாய்
வள்ளத்திலே வஞ்சிகள்
கொண்டை முடிந்த அந்த
சேலைக்காரி கெண்டைக்காய்
காயலில் வலைவிரித்தாள் !!!
தரையிலே நிற்பதற்கு
தண்ணீரில் தள்ளாடியே
நளினமாய் வீசுகின்றாள்
நண்டுக்கான வலையினை
நதிக்கரையின் ஓரமாய் !!!
அக்கரையும் இக்கரையுமாய்
அடித்தள இந்திய பெருங்கடல்
ஒருபுறம் வங்கக்கடலும்
மறுபுறம் அரபிக்கடலும்
அள்ளித்தரும் பொக்கிசமாய் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..