கடுகு கதை - மருமகள்

கடுகு கதை - மருமகள்
---------------------------------

ராசாத்தியம்மா ......
வச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் .
தொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் "மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் " .
கண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....!!!

ராசாத்தி ...ராசாத்தி ....!!!

கூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் .
கடும் வெய்யில் நடுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....!!!

அந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ...

உரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்க போட்டு வாரியல் ...?
கோபாலபிள்ளையின் முகம் சட்டென்று மாறியது ....
எனக்கு தெரியும் நீங்க மருமகள் வீட்ட தான் போய் வாரியல் .
அவளர வீட்ட போய் தண்ணியையும் குடியுங்கோ என்று சொன்னபடி தொடரை தொடர்ந்து பார்த்தார் .

கோபாலபிள்ளை மனதுக்குள் சிரித்தபடி சாய்மனை கட்டிலில் சாய்ந்தார் ....
தொலைகாட்சி தொடரில் "மருமகளை கொடுமை படுத்தும் மாமியாரை திட்டிகொண்டு " நாடகத்தை
பார்க்கும் ராசாத்தியின் செயற்பாட்டை நினைத்து .....!!!


எழுத்துருவாக்கம்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 8:26 am)
பார்வை : 480

மேலே