இடுகாடு

விபத்தில் இறந்து உடல் சிதைந்து போனதால் உடனே தகனம் செய்து விட்டார்கள் முனியசாமியின் மனைவியை............

இரண்டு மணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் முனியசாமி......

முதலில் அவன் காதுக்கு இந்த செய்தியை சொன்னது பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி..

பக்கத்துக்கு ஊருக்கு சென்று விட்டு இன்று தான் ஊர் திரும்பினான் முனியசாமி.

முனியசாமி வீட்டிற்கு போய் பல மாதங்கள் ஆகி விட்டது. மனைவி கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு போய் விட்டாள். இருமகன்கள், என்ன படிக்கிறார்கள் என்பது கூட இவனுக்கு தெரியாது.

வாயில் எப்பொழுதும் புகைந்து கொண்டிருக்கும் கரு நிற சுருட்டு.

ஊருக்குள் முனியசாமிக்கு "அரை பைத்தியம்" என்று பெயர்.

எரிகின்ற சிதை முன் நின்று மௌனமாய் அழுகின்ற முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.

முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்..

பின் குறிப்பு: (இக்கதையை கீழிருந்து மேலாக படிக்கவும்)

எழுதியவர் : (11-Jun-15, 3:31 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : etukaadu
பார்வை : 210

மேலே