சிட்டுக் குருவிப் பார்வை-ரகு

அளவோடு
அழகியலாய்ப் படர்கிறது
உன் பார்வை !

கோர்வையற்று
இடைவெளிகளில்
என்னை நோக்கித்
துடித்திருக்கும்
உன் இமைகள்!

வாசல் வரை வந்து
இரைபொருக்கும்
சிட்டுக் குருவியொன்றின்
எச்சரிக்கை உணர்வு
ததும்புகிறது
அப்பார்வையில்!

உன் ஒவ்வொரு
பார்வையிலும்
ஊற்றெடுக்கும் கனவுகளுக்கு
மடை திறக்கிறேன்
நான்

தோழிகளுடனான
பேச்சில்
அவ்வப்போது
உன் பார்வையை நீ
பத்திரப் படுத்திக்கொள்கிறாய்

நீ பார்க்காத தருணத்தில்
உன் மீது
எங்கெங்கோ வெறித்து
திரும்புகின்றன
என் பார்வைகள்

ஒரு கம்பீர
நம்பிக்கையோடு
மீண்டும் தழுவிய
உன் பார்வையைத்
தாளவியலாமலும்
தகுதியற்றவனாகவும்


தொலையத் தொடங்குகிறேன்
நான்
அதனிலிருந்து

எழுதியவர் : சுஜய் ரகு (11-Jun-15, 2:55 pm)
பார்வை : 892

மேலே