நான் மனிதன்
கவிதைகளை குறை
சொல்பவன் அவன்
என் கவிதையை
மயிர் என்றான் ...??
கவி வல்லமை
ததும்பும் மகாகவி என
எண்ணம் அவனுக்கு ...
ஆணவம் அகங்காரம்
அனைத்தின் முழு
வடிவமும் அவன்
வாசகனா????
அது அல்ல அவன்
கவிதைகளின்
தலைவனாய் தன்னைத்தானே
தீர்மானித்துக் கொண்டவன்
நான் பொன்னாய்
மதிப்பவைகளை
மண்ணாங்கட்டி என்றான்..
என்னையல்ல..??
என் கவிதைகளை....!?
அவை என் குழந்தைகள்
என்றேன்...
கர்வ மேலீட்டால் - "நான்
கவிஞன் -நானே
என் கவிதைகளை அப்படி
ஏற்றதில்லை ..
பிறகெப்படி நீ -உன்
கவிதைகளை ஏற்ப்பாய்"
என்றான்
அவன் தான்
கவிதைகளிற்கு
சொந்தக்காரன் போல
பெயர் செல்ல
மறுத்துவிட்டான்
யாரென்று..??
மொட்டையாய் என்
கவிதைகளை
திட்டித் தீர்த்தவனை
ஏற்க்க முடியவில்லை
கவிஞன் என்று....
பரவாயில்லை
என் குழந்தைகளை
குறை கூறியவனை
மன்னித்துவிட்டேன்.....
நான் மனிதன்