தத்துவச் சாரலிலே

அத்துவைத கார்முகில் ஆதிசங்கரன் பொழியும்
தத்துவச் சாரலிலே சிறிதுநாம் நனைந்திடுவோம்
காவிரி ஆறென பெருகிடுவோம் நெஞ்சினில்
பூவிரி சோலையென மலர்வோம் ஞானத்திலே !

இடுவென இறைஞ்சுகிறேன் பொன்பொருள் அல்ல
இடுவென இறைஞ்சுகிறேன் நற் சிந்தனை ஞானம்
நாடுவது அரம்பையர் ஆடும்சுவர்க்க மில்லை
நாடுவது நின்மனப் பொய்கை தானே !

____கவின் சாரலன்
கவிக் குறிப்பு : இத் தலைப்பினில் ஆதி முனிவனின்
நான் படித்த உரைகளின் மூலம் நான் புரிந்து கொண்ட
பக்தி ஞானப் பாக்களின் சில எளிய தமிழ் வடிவங்களை
தொடர்ந்து சொல்வேன் .

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jun-15, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

மேலே