போர்க்களம்

"தனிமையே
வா"
இந்த
தெருவோரம்
நடந்துசெல்வோம்!

பார்த்தாயா!!
எத்தனை
நிசப்தமானது
இந்த இரா...

பிச்சைக்காரனின்
மீதி சோற்றில்
பசியாறும்
பூனைகள் கூட‌
சப்தமிடவில்லை!!
இதுவெல்லவோ
நிசப்தம்...

மேலைத்தேய‌
நிறுவன
காவலாளியின்
காலடி ஓசைகள்
கூட அமைதி
காக்கின்றதே!!

இரவு உண்மையில்
போற்றத்தக்கது!

இன்னும் நிசப்தம்
புதைந்திருக்கிறது
இந்த இராவில்
வா தனிமையே!!
இந்த தெருவோரமே
இன்னும் நடந்து
செல்வோம்!!

பாதி ஆடையில்
முழு உடல்
மறைக்க முயலும்
களைக்கூத்தாடியின்
சலங்கைகள்
திருடப்படும்
சப்தம் கேட்கிறது
தொலைவில்..

தனிமை ஓர்
வெற்று
புன்னகையோடு
எனை
வெறித்து நோக்க!!

நிசப்தங்கள்
ஒன்றுகூடி
போரிடத்தொடங்கின‌
மனதுள்!!

இனி கடக்கபோகும்
இரவு முழுதும்
நிசப்தம்
கிடைக்கப்போவதே
இல்லை.....

யாரோ சிலரின்
உறுபசிக்கான‌
உணவுபோல்..

எழுதியவர் : புலவூரான் ரிஷி (11-Jun-15, 10:15 pm)
Tanglish : porkkalam
பார்வை : 120

மேலே