துரத்தும் நினைவுகள்
எதிர்பார்க்கவே இல்லை
மீண்டும்
உன் நினைவுகள்
என்னைத் துரத்துமென்று...
திரும்பிப் பார்க்காமல்தான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
இருப்பினும்
வான் நிலவு
உன் முகத்தினை
நினைவுபடுத்த
இன்னும் வேகமெடுக்கிறேன்...
அருகில்
ஒரு ஊர் வந்தது...
ஊரின் பெயரோ
காதல் என்றிருந்தது...
கலங்கிப்போனவன்
கனவு கலைந்து
கட்டிலின் மீது
எழுந்தமர்ந்தேன்...
உடன் சென்று
கண்ணாடி முன் நின்று
என் கண்களை உற்று நோக்க
கண்களுக்குள்
உன் உருவமும்
உருப்படமாட்டாய் என
நீ கூறியதும்
அதிகாலை எழுந்தவுடன்
மறந்தே போகின்றன....