உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 3

நீண்ட நாட்களுக்கு பிறகு
நான் சிரிக்கின்றேனாம்.....!
அது வசந்தத்தில் அல்ல விரக்தியில் என்று
அவர்களுக்குதான் தெரியவில்லை
உனக்குமா தெரியவில்லை..

வானம் அழுத கண்ணீர் துளியெல்லாம்
இந்த பூமி புரட்டிப் போட்டதை போல்
என் கவிதைகளையெல்லாம் உன் கண்கள்
கவித்துப் போட்டுவிட்டு
போய்விடுகிறது விடுகிறது அழகே

விழியும், செவியும் செத்துப் போய்
நடை பிணமாய் இருப்பதால்
நீ நடந்து போவதும்
என்னை கடந்துபோவதும்
என் கண்களை உறுத்துவதே இல்லை

விழி கொன்று, மொழி கொன்று
நீ விலகியதை தினம் கண்டு
விதவிதமாய் புலம்புகின்றேன் நானின்று.

அவள் யார் உனக்கு
அவளுக்காக உருக நீ எதற்கு
என்ற கேள்விக்கு
பதில் சொல்ல தெரியவில்லை எனக்கு
உனக்கு தெரிந்தால்
நீயாவது இந்த உலகுக்கு விளக்கு.

எழுதியவர் : parkavi (12-Jun-15, 5:39 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 67

மேலே