மலர்ச்சி
சுற்றுவது அறியாமல்
சுற்றும் பம்பரம் நான்
சுழற்சி நீ
மவுனமாய் விரியும்
பூ நான்
மலர்ச்சி நீ
என்னை குழைந்த
வண்ணங்கள் நான்
ஓவியம் நீ
என்னை எழுதிடு்ம்
எழுத்துக்கள் நான்
பாடல் நீ
என்னுள் நுழைந்திடும்
நான் நான்
உள் நீ
'உள்' ஆகிய
நீ நான்
நான் நீ....! (1998)
(கடவுளின் நிழல்கள்)