எனக்குள்ளும் அந்த ஒன்று உருவானது -கயல்விழி

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம்
இரு விழிகளின் வழியே
அந்த ஒன்று
இயத்தை திறந்த நொடி .

தரணியை அளக்க நினைத்தவள்
தன்நிலை மறந்தவள் ஆனேன்
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள்
பரிகாசிக்கப்பட்டு போனேன் .

நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள்
நிலம்பார்த்து நடக்கலானேன்
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை
நானே கேட்கலானேன் .

கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார்
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன்
கடுவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.

இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றேன்.
இலகுவாக்கும் உன்னை என்றார்
ஏளனமாய் நகைத்துச் சென்றேன் .

இன்று என்ன ஆனது !
எல்லாமே ஆனது ..
எனக்குள் காதல் உருவாக ..
என் ஆணவம்மெதுவாய் அழிந்திடலானது ...!!!!

எழுதியவர் : கயல்விழி (13-Jun-15, 9:44 am)
பார்வை : 363

மேலே