உன் பார்வையில் எத்தனை அர்த்தமடி

பாவமாய், பாசமாய்
ஏக்கமாய், மௌனமாய்
உன் பார்வையில் தான்
எத்தனை அர்த்தமடி !!

தோழியிடம் பேசுவது
உன் உதடுகள் மட்டும் தான்
மனமல்லவென்று
நம் கண்களுக்கு மட்டுமே
புரிந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!!

கலையாத கூந்தலைத்தான்
எத்தனை முறை ஒதுக்குவாய் ??
என்னை பார்ப்பதற்காக....

உன் மௌன மொழிகள், அசைவுகள்
இன்னும் எத்தனை எத்தனை
அத்தனையும் யாம் அறிவோம்....

நியுடனின் மூன்றாம் விதியை
அமல் படுத்தியது
நம் கண்கள் மட்டும் தான் !!!

ஆனால் ????
குழப்பம் ஓரிடத்தில் தான்

நீ பார்கிறாய் என்று நான் பார்கிறேனா ?
இல்லை
நான் பார்கிறேன் என்று நீ பார்கிறாயா ?

இன்னும் எத்தனை நாளடி
இந்த மௌன பரிட்ச்சியங்கள் ??

போதுமடி உந்தன் மௌன ராகங்கள்
மொழிகள் தத்தளித்து
மடிந்து கொண்டிருக்கிறது...

எழுதியவர் : காவியன் (13-Jun-15, 2:01 pm)
பார்வை : 96

மேலே