பார்வை ஒன்றே போதுமே

ஒரு ஆயிரம் பார்வைகளில்
ஒரு இமைப் பொழுதில்
நிகழ்ந்த முதல் பார்வை ..
உன்னுடையது..

பின் எப்போதும் விலக மறுத்து..
ஒதுங்கிப் போகாமல்..
என்னோடு ..
ஒட்டிக் கொண்ட பார்வை..
அது !

நான்..திருப்பி அனுப்பிய
பார்வை ஒன்றினை
வழியிலேயே எதிர்கொண்டு
அடித்து முடக்கி
அனுப்பி வைத்த உனது..
இன்னொரு பார்வையையும்
இதுவரை நான் மறக்க
முயலவே இல்லை!

உன்னுடைய..
திருமணப் பரிசுகளில்
சுவாரசியமற்று நீ
பார்த்த பார்வை..
பற்றி..
பட்சி ஒன்று பறந்து வந்து
சொல்லிவிட்டு போனது..முதல்..
என் தூக்கம் பறந்து போனது!

உன் குழப்பங்களுக்கிடையில்
உனது ஸ்பரிசங்களில்
எனக்கு எந்த குழப்பமும்
ஏற்பட்டதேயில்லை ..
தொட்டோமா ..இல்லையா..
என்பதில் கூட ..
குழப்பம் உனக்குத்தான்
இருந்திருக்கும் ..
என்று தோன்றுகிறது..!

ஆயிரம் பார்வைகளில்
உன்னுடையது மட்டும்..
ஏன் ..
என்னோடு இன்று வரை நீள்கிறது..

இதற்குப் பெயர்தான் ..
தூரப் பார்வையோ?

எழுதியவர் : கருணா (13-Jun-15, 3:35 pm)
பார்வை : 375

மேலே