என்னவளின் சிரிப்பு

சூரியன் முன்னே அவள் சிரிக்க !!!
வானவில் வண்ணம் தோன்றியது .....
மழையோ அவள் என நான் நினைக்க !!!
மேகங்கள் யாவும் கலைகின்றது ...
காற்றோ அவள் என நான் பார்க்க !!!
நதிகள் யாவும் உறைகின்றது ...
குளிரோ அவள் என நான் சிலிர்க்க !!!
அனல்ஒளி என்மேல் சுடுகின்றது ..
ஒளியின் முகவரி நான் பார்க்க !!!
சூரியன் இதமாய் குளிர்காய்கின்றது ...
அவள் சிரிக்க .. நான் ரசிக்க !!
பருவ மாற்றம் அங்கே நடகின்றது ...