சிந்தனையின் உருவாக்கம்
சிற்பியின் சிந்தனையால்
சிலை உருவானது
கலைஞனின் சிந்தனையால்
கலை உருவானது
கவிஞனின் சிந்தனையால்
கவிதை உருவானது
விஞ்ஞானியின் சிந்தனையால்
அறிவியல் உருவானது
மனித மூளையின் சிந்தனையால்
அனைத்தும் உருவானது
கடவுளின் படைப்பால்
உலகமே உருவானது