இடை தேர்தல்
சிலரது வருகை சிறப்பாகும்
சிலரது வருகை சிரிப்பாகும்
ஜனநாயக கடமை வாக்கு சிறப்பாகும்
பணநாயகம் ஆளுவது சிரிப்பாகும்
திட்டங்கள் தீட்டுவது சிறப்பாகும்
சட்டத்தை துளைபோடுவது சிரிப்பாகும்
சாலைகள் செப்பணிடுதல் சிறப்பாகும்
தேர்தலில் தேறிடவென்றால் சிரிப்பாகும்
தன்னலமற்ற செயல்யாவும் வெகுசிறப்பாகும்
தன்னிலை மறந்தவன் செயலானால் சிரிப்பாகும்
மக்களுக்காக நானென்பது சிறப்பாகும்
மக்கள் வரிபணத்தை விரயமாக்கும் இடைதேர்தல் சிரிப்பாகும்!