காதல் சுவர்கள்
குண்டூசி விழுந்தாலும்
அதிரும் குணமுண்டு
மனிதன் உள்ளம் போல்
புதிரும் நிறைந்துண்டு
தரைத்தொடு கண்ணாடிப்
போல் சிதறும்
இது எப்போதும்
பயத்தால் பதறும்
வயதாகாமல்
கைக் கால்கள் உதறும்
இங்கு நெகிழிப்
பூக்கூட உதிரும்
கண்ணீர் மழைப்
போல் துளிரும்
சில நேரத்தில் அர்த்தமில்லா
மகிழ்ச்சியும் மலரும்
வஞ்சகம் எண்ணம்
உள்ள பலரும்
நிதர்சன நெஞ்சம்
கொண்ட சிலரும்
உண்மைக்கு மட்டும்
ஏங்கி அலறும்
மறைமுகம் தான்
இன்றுவரை இதை பொருளும்
காதல் சுவர்களில்
சிணுங்கிய சித்திரத்தில்
வழிந்த வரிகளின்
வசனங்கள் இவை