தமிழ்-என் காதலன்

உலக மொழி எல்லாம்
நானறியேன் எனினும்
உன் ஒலிபோல் ஏதும்
இனிப்பதில்லை...
மௌனத்திலும் நீ..
சப்தத்திலும் நீ..
உடையாய் எம்மொழி இருந்தும்
உணர்வாய் உயிராய்
கலந்தாய் நீ...
என் காதல் நீ..
காமம் நீ..
கால மாலை இரவு என
முப்பொழுதும் நீ...
என் மழழையில் நீ..
இளமையில் நீ..
முதுமையில் முடி நரைத்தாலும் நீ...
என்னில் நீ ..
எனக்குள் நீ...
நானாய் நீ..
என் நேற்று இன்று நாளையென்று
எல்லாம் நீ...
என் அழகு
அணி
ஆசையாவும் நீ...
என் சூரியன்
சந்திரன்
சுதந்திரக்காற்றும் நீ...
என் தமிழே என் காதலே
நான் மலராய்
நீ மணமாய்....
இணைந்தே காதல் செய்வோம் வா...!!!