சிந்துவும் பாடும்
சிந்து நதி மீதினிலே
____தோணிகளோட்டி விளையாடிட
அந்திப் பொழுதினிலே
_____கேரள கயல் விழியே உனக்காக
சிந்தனை வேறெதுவும் இன்றி
_____கோவளக் கரையில் காத்திருக்கிறேன்
சுந்தர மலையாளத்தில் நீ பாடிசைத்தால்
_____அது கந்தர்வ கானமடி
விந்தை நிலவும் வந்துவிட்டால்
_____சிந்துவின் அலையும் பாடுமுன் கீதம் !
~~~கல்பனா பாரதி ~~~