இணையம் விட்டு வா வெளியே ,,,,,

ஹலோ !!!!
காதலி நீயே என் விதி
இனிப் பயணங்கள் உன் வழி,
கடிதங்கள் வேணாமே
புருவங்கள் எழுதுதே
புதுக் கவிதையின் நடையிலே...

ஓ காதலி
உன் அழகிலே நான் துகளடி,
நீருக்குள் நடப்பதாய்
நளினங்கள் நயமடி,
மதரங்கள் விரியுதே
மனதுக்குள் இனிக்குதே,
மௌனங்கள் பேசுதே
மனசெல்லாம் தூரலாய்...

மணக்கின்ற மாலையில்
மழுப்பாமல் நீ வாயென் ரேகைக்குள்
விரல் கொழுகி
ரகசியங்கள் பரிமாறி
ரம்மிய பொழுதுகளை -
இசைக்குள்ளே இணைத்திங்கே
இனிக்காதல் செய்வோமே
இணையம் விட்டு வா வெளியே ,,,,,

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (15-Jun-15, 11:19 am)
பார்வை : 136

மேலே