மனதின் நிறம்
தேநீர்அருந்தும் போதும்
உணவருந்தும் போதும்
சரியில்லையெனில்
சட்டெனச் சொல்லிடுவேன்
மனைவியிடம்...
ஒருபோதும்...
சிறப்பென்று சொன்னதில்லை
அதிகம் உண்பதிலே
அறிந்து கொள்வாளவள்...!
முதல்முறை தன்
முல்லைப்பூ கரங்களால்
தான்செய்த தேநீரைத்தந்த
என்மகளிடம் ...
பலமுறை சொன்னேன்
சுவையோடு...சூப்பரென்று
வருவோர் போவோரிடமட்டுமின்றி
வரைந்தும் கொண்டிருக்கிறேன்
கவியாகவும்...
மனதின் நிறம்
மகளெனில்
மல்லிகைப்பூவாகும்
இரகசியமென்னவோ...?
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்