இது கவிதையல்ல

அந்த பங்களாவில் இருக்கும்
பையன் ஒருவன்தான்
ஐந்நூறுக்கு ..
நானூற்று எழுபது
எடுத்தது..
அவங்க அப்பா
பெரிய அரசாங்க அதிகாரியாம்..
தினமும் பளபளக்கும்
தகடு போட்ட கார் வந்து
கூட்டி போகும்..
அப்பாவையும் பிள்ளையையும்..
அப்பாவைப் போல்
பிள்ளையும் செம அறிவாளி..
..
செருப்பு தைக்க வந்தவர்..
அடுக்கினார் தகவல்களை..
..
குடையின் கீழ்
சிறு பையன் ..
அப்பாவுக்கு உதவியாக ..
இன்னொரு செருப்பின்
அறுந்த பகுதி நூல்
பிரித்தபடி..
..
என்ன தம்பி..
படிக்கிறாயா..
..
ஆமாங்க..
.பத்தாவது பாஸ் ..
ஆயிருக்கேன்..
..
என்கூட சாயங்கால
நேரமெல்லாம்
இருப்பானுங்க..
..
என்ன மார்க்குப்பா..
..
ஐந்நூறுக்கு
நானூற்று தொண்ணூறுங்க !
..
இதில் யாருடைய வாழ்க்கை
ஒரு கவிதை?

எழுதியவர் : கருணா (16-Jun-15, 9:48 am)
பார்வை : 203

மேலே