சுமை தாங்கி
எப்போதும்
குளுமை தரும்
எங்கள் வீட்டு
வேப்பமரம்
தாத்தா வைத்தது
எப்போதும்
நான் குதித்து
விளையாடும்
கயிற்றுக்கட்டில்
தாத்தா வாங்கியது
இன்று அந்த
வேப்பமரமும் இல்லை
தாத்தாவும் இல்லை
கயிற்றுக்கட்டில்
மட்டும் கிடக்கிறது
வீட்டிற்கு பின்புறம்
ஒரு மூலையில்
எங்கள் நினைவை
சுமந்தபடி.