முகமூடிகள்

ஆயிரம் மனிதர்கள்,
ஒவ்வொருவரும்
நல்லவராய்,
அறிவாளியாய்,
பண்பாளராய்,
நலன் விரும்பியாய்,
நட்பாளராய்,
தியாகியாய்,
ஆஹா!!! அசந்து போனேன்!
என்ன அற்புதமான மனிதர்கள்!
தருணம் அமைந்தால்,
பூனைகளாய்க் கூட
புலிகள் உலாவலாம்!!!
அந்த அற்புத மனிதர்களின்
முகமூடிகள் கிழிந்த போது,
முகத்திரைகள் விலகிய போது,
ஆடிப்போனேன், அகோரம்
தாங்க முடியாது.
ஒரு முகத்துக்கு இத்தனை
முகமூடிகளா??????
முகமூடிகளே!!!!!!!!!!
அறிந்து கொள்ளுங்கள்.
முகமூடிக்குள்
ஒளிந்திருக்கும் உங்கள் நிரந்தரமான
முகங்கள் சிலவேளை
உறக்கத்தில் வெளிப்படலாம்!!!!!
- ருஷானா -