இல்லாதவன்

எனக்கென்று ஓர் வீடு இல்லை!
மிடுக்காக சென்று இறங்க AC கார் இல்லை!
பகட்டாகத் தெரிய பளபளக்கும் ஆடை இல்லை!
Bபந்தா காட்ட என்னை சுற்றி கூட்டம் இல்லை!
இருப்பதெல்லாம் படிப்பு என்னும்
"மூலதனம்" ஒன்றுதான்!
விழாக்களுக்கு என்னை அழைக்க,
ஒருமாதிரியாய், இருக்கிறதாம்.
" ஒன்றுமில்லாதவன்" என்று
சொந்தமெல்லாம் கூடி சிரிப்பார்களாம்.
நான் சிரித்துக் கொண்டேன்,
விலகிக் கொண்டேன்,
பொறுத்துக் கொண்டேன்,
வெறுப்புக் கொண்டேன்,
பொறுப்புக் கொண்டேன்.
இலக்கை நோக்கிய என் ஓட்டம், ஓய்வு
உறக்கம் இன்றி, ஓடிய ஓட்டம் பத்து வருடங்கள் இருக்கும்.!!!!
ஆம் இருக்கும்!!!!!
எனக்கென்று ஓர் வீடு, வாகனம், வசதி
நானும் இன்று பணக்காரனாம்,
உழைப்பால் உயர்ந்தவனாம்,
பிள்ளைகளுக்கு உதாரணம் காட்டுகிறார்களாம்!
ஊரெல்லாம் எனக்கு உறவாம்!
நான் சிரித்துக்கொண்டேன்,
அன்றும் நான் நானாகவே
இருந்தேன்!!!!!
"இல்லாதவன்" என்றார்கள்
பணம் என்னும் "தகட்டுத் துண்டும்"
காகிதமும் இல்லாததால்!!!!
-ருஷானா-