இறைவன் எழுதும் நாடகம்
என்ன இது நாடகம்
எண்ணிப் பார்க்க முடியலையே
இறைவன் எழுதும் நாடகம்
இன்னல் எதுவும் குறையலையே
பாதை எங்கோ போகிறது
பயணம் இன்னும் முடியலையே
வாழ்க்கை தினமும் தேய்கிறது
வலிகள் இன்னும் குறையலையே
கண்ட கண்ட இலட்சியங்கள்
கண்ணீரில் மூழ்கிறதே
அழுது அழுது காலங்கள்
அர்த்தமற்று ஆகிறதே
வாய்பேச துடிக்கையிலே
வார்த்தை ஊமையாகிறதே
உறவை நினைத்து பார்க்கையிலே
மனசு தீயை மூட்டுறதே
விழியில் கண்ணீர் சுடுகிறதே
மனசில் நினைவு வலிக்கிறதே
உடலில் உதிரம் கொதிக்கிறதே
உயிரில் சுவாசம் தேயுறதே
மொத்தத்தில்
என்
கனவும் நினைவும் சேர்ந்து
காயம் போட்டு பார்க்கிறதே