தாய்மை

எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
தோற்று போய் விடுகிறதே
என்று சோர்ந்த
நேரங்களில் எல்லாம்
ஒரு வயதில்
என் கை பிடித்து
நடக்க வைத்த
அதே தாய்மை மாறாமல்
என்னை உன் மடியில்
சாய்த்து ஆறுதல்
கூறும் உன்னை
பார்க்கவா பத்து மாதம்
நான் கெடு கேட்டேன்....
உணர்வுகள் ஒன்று கூடி
கனத்து கிடக்கிறது
என் மனது
உன் அன்பு புன்னகையை
கையேந்தி ஏற்கும் போதெல்லாம்....

எழுதியவர் : இந்திராணி (17-Jun-15, 3:03 pm)
Tanglish : thaimai
பார்வை : 277

மேலே