வெளிச்சத்தை கொண்டு உயிர்பெறும் நிழல்கள்

வயிறு நிரம்பியது போதும் என்றோ..
சுவை இல்லாததாலோ..
பழையது என்றோ..!
தூக்கிவீசப்பட்டு அல்லது
பாவம் என்ற முகபாவனையில்..கை நீட்டும்
பல உணவுகள் சில நேரங்களில்
எங்கள் வயிற்றை நிரப்பும்..!

உணவு கிடைக்காத..
மழை நேரங்களிலும்..
பூட்டிய வாசலின்போதும்..
திருவிழாக்களிலும்..
எங்களுக்கு கைகொடுப்பதென்னவோ..!

போக்குவரத்துக்கு நெரிசலில்
வாகனத்தின் கண்ணாடியை
துடைப்பதாலும்..!
புதிய உணவுவிடுதி , ஆட்கள் தேவை
ஆடைகளின் தள்ளுபடி, போன்ற..
துண்டுசீட்டுகளின் பிரசங்கதாலும்..! அவ்வப்போது
நிரப்பப்படும் எங்கள் வயிறு..!

எங்களில் சிலர்..
நடக்காமலும்,பேசாமலும்
சொல்வதர்கில்லாமல்..!
எங்களின் முகவரியற்ற உறவுகளில்
இறைவன் இருபெதேன்னவோ அதிசயம்..!

எங்களின் உணர்சிகள் என்னமோ
வறண்ட நிலத்தில் மழைநீர்தான்..!

கையேந்தும் நேரங்களில்
கொடுப்பவரெல்லாம் இறைவனாய் தெரிவதால்..
எங்களுக்கு வேறு தெய்வங்கள் இல்லை..
அப்படி இருப்பின் அதில் பயனேதும் இல்லை..!

முகவரி இல்லாத எங்களுக்கு
நாங்கள் இறந்தபின் அழுவது யாரோ..!!!

வெளிச்சத்தை கொண்டு உயிர்பெறும் நிழல்கள்
நாங்கள்..
எங்களுக்கு நிறங்கள் இல்லை..!!!

(கொடுப்பதற்கு மனமுள்ளவர்கள் அன்பு இல்லத்தை நாடதேவயில்லை
உறவு இல்லாதவர்களுக்கு அன்பாய் இருங்கள்.. கண்ணெதிரே தோன்றுபவர்களுக்கு முடிந்தவரை கைகொடுங்கள்..!!!)

நட்புடன் சதுர்த்தி...

எழுதியவர் : சதுர்த்தி (17-Jun-15, 7:22 pm)
பார்வை : 127

மேலே