கருணை அளிப்பாரா?
விழியிரண்டும் நனைகிறதே
விடியலை நோக்கி - என்
உள்ளம் இன்று
உளறுதடா
உரிமைகள் கேட்டு....
இங்கே
கொடுமைக்கு மிருகம் உண்டு
கொடுப்பதற்கு மனிதம் இல்லை.
கடலின் நடுவில்
பயணம் எனும்
படகில் தத்தளிக்கின்றோம்.
கரை சேரும் நாளை எண்ணி
கண்ணீரில் கரைகின்றோம்.
சுட்டெரிக்கும் காற்றை
சுவாசின்றோம் - எம்
உடன் பிறப்பை இழந்தோம்
உறவுகளை பிரிந்தோம்.
விதியின் பாதையில்
விதைக்கப்படும் உடல்கள்
ஆனோம்.
காலத்தின் எல்லைவரை
கவலையின் கரையினில்
காத்திருக்கின்றோம்.
எம் இறுதி மூச்சு
அடங்க முன்
கடவுள் எமக்கு
கருணை அளிப்பாரா என்று….?