என் காகிதத்திற்கு சொல்லுங்கள்

முதல்கவிதை
முதல் காதல்கடிதம்
இரண்டின் அனுபவமும்
என் காகிதத்திற்கு ஒன்றே...

தமிழில்
அப்படி எந்த
வார்த்தையைத்தான்
தேடுகிறேன் என்பதை
தமிழ்மொழியே அறியாது.?

எழுதுகோலின்
மைகள்
உறைபனியாய்
தூங்கும்..

மேசையில்
ஒரு காகிதமும்
குப்பையில்
பல காகிதங்களும்
என்னை பார்த்து
முறைக்கும்..

எண்ணங்கள்
பல ஒளிஆண்டுகளை
கடந்து செல்லும்
மின்னலாய் வார்த்தைகள்
வந்தவுடன்.!

உறைபனி
உயிர்த்தெழும்
எழுதிடுவேன்..

கவிதை
முடித்தப்பின்னும்
பயமிருக்கும்
என் காகிதத்திற்கு
தானும் முதல்தாள்
தானோ! என்று

நான் கசக்கிய
காகிதங்கள் வாடியிருக்கும்
தாங்கள் வெற்றிலையில்
காம்பு என்று

கவிதை என்னும்
தங்கச்சிற்பத்தை
செதுக்கையிலே
சிதறி விழும்
"தங்கத்துகள்கள்"

அவை என்று

என்
காகிதத்திற்கு
சொல்லிடுங்கள்....

எழுதியவர் : பார்த்திப மணி (18-Jun-15, 12:20 am)
சேர்த்தது : பார்த்திப மணி
பார்வை : 127

மேலே