நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று

நீயும் நானும் யாரோ இன்று...

ஏனோ என் மனம்
விழுந்தது உன்னில்
சட்டென கலந்தது
உன் முகம் என்னில்
காதலின் கானம்
இசைத்தது தன்னில்...!!!

கனவினில் நித்தமும்
கலந்திடத் தானே
காலம் தவறாமல்
வந்திடு மானே
இரவு கலைந்தாலும்
காத்திருப்பேன் நானே...!!!

உன் மனக்கூட்டுக்குள்
உறங்கிடத்தானே
ஓரிடம் உண்டென்று
உரக்கச்சொல் நீனே
கைபிடுத்துன்னை
கவர்ந்திடத்தானே...!!!

நித்தம், உந்தன் கனவினில்
வந்து தூக்கம் கலைப்பது
தொல்லைதான் என்று...
எப்பவும், உன் நினைவினில்
வாழக் கற்றது நன்று...!!!

ஆனாலும்,
நீ சொல்லிடு மானே!
எப்படி உன்னுள்
நான் வாழ விருப்பம்...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (17-Jun-15, 10:59 pm)
பார்வை : 100

மேலே