உனக்கு ஏண்டா 9 பிடிக்கும்
உனக்கு ஏண்டா 9 ஆம் எண் (நம்பர்) ரொம்பப் பிடிச்சிருக்கு?
டேய் நண்பா போன வருஷம் என்ன ஏழரை நாட்டுச் சனி பிடிச்சு குடும்பத்தையே ஆட்டி வச்சிருச்சு. ஜோதிடர் "ஒனபது ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செஞ்சு வச்சா சனி வெலகும்"ன்னு சொன்னாரு. நானும்"சரி"ன்னேன்.
அவரு சொன்னாரு" நீ தான் நில வணிகத்திலே (ரியல் எஸ்டேட்) கோடிக் கணக்கிலே சம்பாதிச்சிருக்கறயே அதனால பெரிய 9 ஜோடிகளுக்கு செய்யணும்"ன்னாரு.
"பெரிய 9 ன்னா என்னனு" கேட்டேன்.
அவரு சொன்னாரு"144" ன்னு.
என்னடா ஒண்ணும் புரியல.
எனக்கு 9 ராசியான நம்பரு. எண் (நியூமராலஜி) கணித ஜோதிடப்படி 144 அய்க் கூட்டினா (1+4+4=9) 9 வரும். அவர் சொன்னபடி செஞ்சேன். சனி வெலகி குரு பார்வை கெடச்சு இப்ப நிம்மதியா இருக்கேன்.