மின் அஞ்சல் பொன்னூஞ்சல்
மின்னஞ்சல் வழியே
நுழைந்து
தமிழ் பொன்னூஞ்சல் ஆடி
போட்டி பரிசு என்று
காத்திருந்து காத்திருந்து ஏமாந்து
கண்ணூஞ்சலில் கண்ணீர் நீராட
பின் போவதேனோ என் கவித் தோழா !
இலக்கியத்தின் இலக்கு இதயம்
இதயத்தில் உயர்பவன் கவிஞன் !
----கவின் சாரலன்