அம்மா
அ ம் ம் மா ...
உயிருக்குள் உயிராய் எனை வளர்த்து உலகுக்கு எனை தத்து கொடுத்தாய்...
சுமையோடு சுமையாய் நெஞ்சில் சுமந்து ... சுகமாய் எனை வளர்த்தாய்...
இன்பத்திலும் துன்பத்திலும் இடைவிடாது ...அன்போடு எனை காத்தாய்...
உன்னுலகு நான்தான் என்று... நாள் தோறும் ஊட்டி ஊட்டி வளர்த்தாய்....
என் சிரிப்பே உன் சிரிப்பாய் கொண்டு எனக்காக தியாகம் செய்தாய்....
நான் உண்டால் நீ உண்டாய் என்று எந்நாளும் உடன் இருந்தாய்....
உன்னுயிரே என்னுயிர் என்று இன்னாலும் உயிர் வாழும்....
என் தெய்வமே....
எந்நன்றி கொண்டாலும் இணை ஏது உனக்கு நானே? என் தாயே!!!
இனி ஈரேழு ஜென்மத்தில் உன் தாயாய் நான் பிறந்து.... உனை சுமக்க வரம் வேண்டி உன் பாதம் வணங்குகிறேன்...
என் உயிர் அ ம் ம் மா!!!!
பிரியமுடன்
அசுபா...