தோற்ற காதல்

காதலை மறுத்து நின்றாள் காதலி.
காரணங்கள் ஆயிரம் இருக்கட்டும்,
காலத்தின் முன் நினைத்திருக்கவேண்டும்.
கசங்கி வீழ்ந்தபின்,
காணும் காதல்களை எல்லாம்
காதலுற்றேன். களித்திருக்கிறேன்.
எந்த காதல் தோல்விகளும் என்னை
கலங்கடிப்பதில்லை இப்பொழுது,
உன் மீது நான் கொண்ட காதல் தவிர.
நினைக்கும் நிமிடமெல்லாம் இன்பமாய்.

எழுதியவர் : jujuma (12-May-11, 12:01 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 377

மேலே