பத்து நிமிடங்கள்

பத்து நிமிடங்கள் என்பது,

பஸ்ஸ்டாப்பில் நிற்கும் நேரம்,
ஒரு காப்பியை குடித்து முடிக்கும் நேரம்,
கணணியை ஆன் செய்து ஆப் செய்யும் நேரம்,
ஒரு பட்டுச் சேலையை உடுத்தும் நேரம்,
பூக்களின் வாசம் உச்சந்தலை தொட்டுத்
திரும்பும் நேரம்,
உனக்கு சிறியதாயும் எனக்கு முக்கியமானதையும் கொண்ட நேரம்,
உன்னோடு பேச விரும்பி வேண்டி நின்ற நேரம்,

நீ வர விரும்பாததினால்,

என் உயிர் என்னைப் பிரிந்து,
திரும்பி வர மறுத்து நின்ற நேரம்.

எழுதியவர் : jujuma (12-May-11, 12:36 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 317

மேலே