விதி

தனியொரு வழியில் சந்தோசமாய்
பயணித்திருந்தேன்.
இடி ஒன்றை என் மேல் விழவைத்தான்
இறைவன்.
தூரத்து கானல்நீர் கண்டு வழியினை
தவறவிட்டுவிட்டேன்.
காணும் இடமெல்லாம் சோலைகளாய்
தெரிந்தன.
அருகினில் சென்றதும் சோலை, பாலையாய்
மாறிவிட்டிருந்தன.
தனிமைப் படுத்தப்பட்டதை உணர்ந்து
தவித்தேன்.
அதிலும் உள்ள இன்பத்தினை உணர்த்தி
நின்றான்.
இறைக்குள் என்னையும் கரைத்து
மறைத்தான்.


எழுதியவர் : jujuma (12-May-11, 11:49 am)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : vidhi
பார்வை : 355

மேலே