விலைவாசி உயர்வு

விலை கேட்டு ... விலை கேட்டு ...
வாங்க வந்த பொருட்களை எல்லாம்,
வேண்டாம் என்றான்! - வந்ததற்கு
தன்னிடம் இருந்த மொத்த தொகையையும்
கொடுத்து மலிவாய் தோன்றியதை
பெற்றுச் சென்றான்! - அவன் தொழிலில்
ஊதிய உயர்வு என்பது இல்லவே இல்லை...
ஆனால் விலைவாசி உயர்வு
தினம் தினம் ஏற்ற நிலையில்....
நடுத்தரமாம் அவனை அடுத்த நிலை நோக்கி
எண்ணிப்பார்க்கவும் விடவில்லை ....-அவன்
அன்றன்றைய நிலையை சமாளிக்க
தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறான் ...!