உனக்கென்ன செய்வேன்
என்ன வேலைக்குச் செல்ல போகிறாய் எனும் தந்தையின் கனவுகள் நிறைந்த கேள்விகளுக்கும்
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி
வருவாய் எனும் தங்கைகளின் ஏக்கங்களுக்கும்
பதில் எண்ணி குழம்பி
திரும்புகையில் சலனமற்ற
என் அன்னையின் முகத்தில் தவழும்
புன்னகையை கண்டேன்
மனம் கனக்கத்தான் செய்கிறது.
என் வாழ்வில்
யாவுமாய் நிறைந்த
உனக்கென்ன செய்யப்போகிறேன்
என எண்ணுகையில்...