யார் நீ அம்மா

யார் நீ............................?

அழுதேன் அரவனைத்-தாய்
சிரித்தேன் உடன் சிரித்-தாய்
நடந்தேன் உடன் நடந்-தாய்

கவலையில் கண்ணீர் துடைத்-தாய்
பசியில் உணவளித்-தாய்
தாகத்தில் பால்கொடுத்-தாய்

எங்கு பிறந்-தாய்
எங்கு வளர்ந்-தாய்
இங்கு எப்படி வந்-தாய்

உடம்பை உப்பாக்கி
இரத்தத்தை வேர்வையாக்கி
உப்பு காட்டில் என்னை
பெற்றெடுத்த மகராசி நீ.........................அம்மா.

தாய் மொழியில் தாயே அழகு பார்ப்பதில்
தனித்துவம் தான் தமிழுக்கு .................

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (20-Jun-15, 2:14 pm)
Tanglish : yaar nee
பார்வை : 303

மேலே