வீசி எறிந்தேன் உன்னை

புத்தகத்தில் அகரம் எழுத
அன்னை அடித்தபோதெல்லாம்
வீசி எறிந்தேன் உன்னை...
பாம்பாய் தேர்வைக்கண்டு
பயந்தபோதெல்லாம்
தேர்வின் முடிவில்
வீசி எறிந்தேன் உன்னை...
ஆசிரியர் என்னை வசைப்பாடினால்
உன் மீதே என் கோபம் விழும்
வீசி எறிந்தேன் உன்னை...
அட்டையைப்போல் உன் குருதியை
உறிஞ்சிக்கொண்டு இறுதியில்
வீசி எறிந்தேன் உன்னை...
என் காதல்கடிதம் தோற்றதற்க்கு
காரணமாய் உனை எண்ணி
வீசி எறிந்தேன் உன்னை...
புதியன புகுக பழையன கழிக
என்று புதியதைக் கண்டால்
வீசி எறிவேன் உன்னை...
தொடர் ஓட்டத்தில் நீ நின்று
மூச்சு வாங்கினால்!
வீசி எறிவேன் உன்னை...
ஆனால்..!
என்று கவி எனும் மனம் திறந்தேனோ! அன்றுமுதல்
நீ என் ஆறாம்விரல்...
இனி வீசி எறிவேனா.!!
உன்னை என் அருமை
-எழுதுகோலே..