அந்த நாட்கள் எங்கே

அனுபவம் இன்றி ஆரம்ப பள்ளியில்
அறிமுகம் ஆனோம் அன்பாய் .
அ முதல் அக்கு வரை
திக்கி திக்கி படித்தோம்
அம்மா என்ற வார்த்தை யை
முதன் முதலில் சொல்லி பார்த்தோம்
கால் மணி
அரை மணி
அடிக்கும் நேரம்
சிட்டுகுருவி யாய்
பறந்து சிறகடித்து
தேன் மிட்டாய்
வாங்கி தின்றோம்.

முழு மணி அடித்ததும்
தலை கால் புரியாமல்
ஓடி வீடு சென்று
அம்மா சோறு என்று
அன்போடு கேட்ட அந்த
நாள் இன்றும் மெதுவாய்
வந்து போகும்.
வெள்ளி மாலை
வந்தால் பள்ளி முடிந்து
அய்யா ஜாலி என்று
நாம் ஓடிய நாட்கள்
மெதுவாய் அசை போடும்
இன்றும் நண்பா.
விடுமுறை நாளில்
ஐஸ் பை ,நொண்டி
சரளி விளையாண்ட
நாட்கள் மறவேன்

நீ மேல் படிப்புக்கு
வேறு கல்லூரிக்கு சென்ற
போது கூட உன் பாசம்
குறையம்ல் இருந்தது
கண்டு விய்யந்தேன்
அன்று
ஆனால் இன்று
நீயோ கடல் கடந்து
வேலை செய்கிறாய்
நானோ உன்னை நினைக்காத
நாட்கள் இல்லை
பணத்தை பார்த்ததும்
உன் பாசம் எங்கே
என்று கேட்க
தோன்றுகிறது

நான் உன் மீது
வாய்த்த பாசம்
தப்பா
இல்லை நீ என்றாவது
எனக்கு
உதவுவாய் என்று
நினைத்தது தவறோ?
உனக்காக வாழ்ந்த
நாட்கள் முடிந்து
இன்று எனக்காக
நான் ஓடி கொண்டு
இருக்கிரன்.

அனால் என்னவோ
உன் நினைவுகள்
என்னை துரத்துகின்றது
முடியாமல் முயல்கிறான்
உன்னை மறக்க
இது தான்
நீயும் நானும் இன்று யாரோ
ஆனால் நினைவில் வாழ கற்றது
நன்று என்று தோன்றுகிறது ............................என்றும் அழியாத உன் நினைவுகளுடன்

கண்ணீருக்கு சொந்தமானவன் என்றும்

எழுதியவர் : ராஜவேல் சக்தி (20-Jun-15, 1:37 am)
சேர்த்தது : ராஜவேல்சக்தி
Tanglish : antha nadkal engae
பார்வை : 84

மேலே