குற்றாலம்
காதல் என்ற
குயில் பாடும் இசையால்
உன்னை எழுப்புகிறேன்,
நீ
விழித்ததும்
எனை பார்க்க வேண்டுமென்று,
ஆனால் - நீ
விழித்தும் எனை பார்க்கவில்லை
என் குயில் இசை கேட்கவில்லை ,
இப்படியே
நாட்கள் சென்றால் இந்த
குயிலின் இசை வறண்ட 'குற்றாலமாகிவிடும்'
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்