உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 7
தண்டனை தாங்காமல் தவிக்கின்றேன்
தள்ளி நின்று நீ சிரிப்பதால்
இங்கு அசிங்கபடுவது நானல்ல
நான் உன்மீது செலுத்திய அன்பு.
காலங்கள் மாறிப் போகும் - என்
கண்ணீரும் காய்ந்து போகும்.
நினைவு மட்டும் வடுக்களாய் - என்
நெஞ்சில் நிலைத்துப் போகும்.
இறந்த பின்னும் வாழ நினைக்கும் என்னையா
இருக்கும் போதே இறக்க வைத்தாய்.
நீ என்னை மறந்து போவதும்
இந்த மண்ணில் நான் இறந்து போவதும் ஒன்றுதான்
என்னோடு நீ பேசாமல்
அடுத்தவர்களோடு பேசும்போது
நான் படும் அவஸ்தை
அந்த ஆண்டவனும் அடைந்திருக்க முடியாது.