காதல் கடிதம்
நான் உன்னை காதலிக்கிறேன்
இந்த உலகம் மேல் சாட்சியாக
நிலவு என் காதலை உணர்ந்தது
நீ என்னோடு பேசும் போது எல்லாம்
எதை பார்த்தாலும் அதில் நீ தான்
ஆகாயத்தில் இருந்து வரும் மழை துளி
என்னை தொடுவதை கூட
நான் விரும்பவில்லை
நீ என் கன்னத்தை தொட்ட போது
நிலவினை கேட்டேன்
நீ எனக்கு வெளிச்சம் தர வேண்டும்
அப்போழுதும் உன்னை பார்த்து ரசிக்க வேண்டும்..
கடலின் ஆழத்தை பார்த்ததில்லை
உன்னை காதலிப்பதால்
என் மனதின் ஆழத்தில் இருத்து
உன்னை மறக்க முடியவில்லை
உன்னை தவிர என் மனதில்
வேறு யாருக்கும் இடமில்லை
நீ சுவாசித்த காற்றையே
நானும் சுவாசிக்க விரும்புகிறேன்
என் காதலனே ..........
என்றும் உன்னை மட்டுமே
நேசிக்கும் இதயம்
எழுதும்
காதல் கடிதம்.........